Sunday, March 22, 2009

அலைபேசி


வார்த்தைகளை சிந்தாமல்
காதில் கொட்டும்
வார்த்தை புனல் செல்

நாம் சொல்வதை
எவர் காதிலும்
திர்த்து சொல்லாத
நேர்மையாளன் செல்

நீங்கள்
புன்னகையோடு பேசினாலும்
கோபத்தோடு பேசினாலும்
உணர்வு வயப்படாத
ஞானி செல்

காதலர்களுக்கு கையடக்க
தூதுவன் செல்

மதியாதார் தலை வாசல் மிதியாதே
இது பழமொழி
அழைப்பை ஏற்ர்காதார்
காதினில் நுழையாதே
இது செல்மொழி

மனிதனுக்கும் சரி
செல்லுக்கும் சரி
காசு இருந்தால்தான் மதிப்பு

காசு இருந்தால்
உன் பேச்சை மற்றவர் கேட்கலாம்
காசு இல்லையென்றால்
மற்றவர் பேச்சைத்தான்
நீங்கள் கேட்க முடியும்

எத்தனை மணி நேரம்
செல்லில் பேசினாலும்
சில மணித்துளிகள்
முகம் பார்த்து
புன்னகைக்கும் சுகத்திற்கு
ஒப்பாகுமா ?

2 comments: