
என் அம்மாவிற்கு
உவமை சொல்ல
முயல்கிறேன்
என் அம்மாவிற்கு
உவமையாக
கடவுளை சொன்னால்
வேண்டாம்
கடவுள் என்றால்
மதம் இறுக்கும்
மதம் இருந்தால்
சண்டைகள் இருக்கும்
என் அம்மாவிற்கு
உவமையாக
காற்றை சொன்னால்
வேண்டாம்
காற்று
மரத்தின் தலை அசைத்தால்
தென்றல்
மரத்தின் வேரை அசைத்தால்
புயல்
என் அம்மாவிற்கு
உவமையாக
மழையை சொன்னால்
வேண்டாம்
மழையால் நிலத்தில்
விதைத்தது முளைக்கும்
அதுவே வெள்ள்மானால்
முளைத்தது அனைத்தும் மூழ்கும்
உலகில் குறையே
இல்லாத நிறை எது
எல்லா உவமைகளும் உமையாய் நிற்கும்
இப்போது புரிகிறது
என் அம்மாவிற்கு
உவமை
என் அம்மா மட்டும்தான்