skip to main |
skip to sidebar
(எப்ரல் 23 உலக புத்தகநாள் வாழ்த்துக்கள்)புத்தகங்கள்மெளனமாக சொல்வதைமனிதர்கள்கண்களால் கேட்கும்அதிசய இடம்இதுசகிப்புத்தன்மையின் சரணாலயம்பைபுள்,குரான்,பகவத்கீதைஅருகருகே வைத்தாலும்எவையும்அடித்துக்கொள்வதுமில்லைஇடித்துக்கொள்வதுமில்லைஇதுஒரு விமானம்வந்து அமர்ந்தால் போதும்பாஸ்போட் வேண்டாம்பயணச்சிட்டு வேண்டாம்உலக்ம் சுற்றலாம்ஏன்சிந்துசமவெளியின்சந்துகளைக்கூடசந்தித்து வரலாம்இங்கு வரும்எவரும் நேரத்தைசெலவழிப்பதில்லைசேமிக்கிறார்கள்இதுஒரு தவச்சாலைஇங்கு உங்களுக்குவரம் கொடுக்கபுத்தகங்கள்தவம் கிடக்கிறதுஇது தேசத்தின்அனுபவ வங்கிநேசம் கொண்டோரேகணக்கு வைத்துக்கொள்ளுங்கள்அறிவு பசிப்போரேஉங்களுக்கு இதுஅட்சய பாத்திரம்இங்கு மட்டும்தான்நூல்கள் மனிதனைநெய்கின்றன
மேகத்தை குனிந்து பார்க்கும்
வரம் கிடைத்தது
எனக்கு அங்குதான்.
நெருப்பால் அல்ல
பூக்களால் புகைந்து
கொண்டிருக்கும் பூமி அது
இங்கெல்லாம் சாலை
ஒரத்தில் மரங்கள் இருக்கும்
அங்கோ
மரங்களின் ஒரத்தில் சாலை
புகைப்பட்டால் கண்களில்
எரிச்சல் வரும்
அங்கு புகைப்பட்ட என்
கண்களுக்கு குளிர்ச்சி வந்தது
அந்த அதிசய புகை
அங்கு மட்டும்தான் சாத்தியம்
அங்கு அவ்வப்போது
வானம் பூக்களை பார்த்து
புன்னகை சிந்தும்
அதற்கு பெயர் சாரல்.
வானவில்லை
நறுக்கி போட்டதைப்போல் எங்கும்
வண்ண வண்ணப் பூக்கள்
அந்த மலையரசிக்கு
கோடிக்கரங்கள்
அத்தனையும் மரங்கள்
மிடுக்கான மலைதுள்ளி வரும்வெள்ளி அருவி பசுமை மரங்கள்ஒன்றாய் பர்ர்த்தால்என் தேசிய கொடிநன்றாய் தெரியும்.
அங்கும் பார்த்தேன்
இரண்டாயிரம் அடி
கடல் மட்டத்திற்கு மேல்
மக்கள் வாழ்கிறார்கள்
ஆனால் அவர்களின்
வாழ்க்கை
வறுமை கோட்டிற்கு
கீழேதான்.
மூன்று நாட்கள்
நான் தங்கி வந்து விட்டேன்
என் மனம் இன்னும் வரவில்லை.