Wednesday, February 25, 2009

அசட்டு அலைகள்











ஒரு முறை காலில்

விழுந்து வணங்கலாம்
அவளின் பாதம் பார்த்த பரவசத்தில்
எத்தனை முறை வந்து விழுகிறது
அந்த அசட்டு அலைகள்

ஆடை








வானம், பூமி
பறவைகள், விலங்குகள்
சூரியன், சந்திரன்
இவை
நிர்வாணம் உடுத்தி
அழகாய் இருக்கிறது
இங்கு
மனிதர்கள் மட்டும் ஆடை உடுத்தி
அசிங்கமாய் இருக்கிறார்கள்

Tuesday, February 24, 2009

அவளின் விழிகள்

நீர் இல்லாமல்
நீந்தும் மீன்கள்
வேறென்ன
உன் கண்கள்
உன் விழி பேசும்
மொழி புரியவில்லை
ஆனால்
அர்த்தம் அழகாய் புரிகிறது
இரண்டு வண்ணம் கொண்ட
உன் கண்கள்
நான் பார்க்கும் போது மட்டும்
ஆயிரம் வண்ணங்களை அளிக்கிறது
எப்படி இது சாத்தியம்
உன் கண்களில் மாத்திரம்

மரமாகிபோங்கள் மனிதர்களே




எல்லா மரங்களும்
கைகளை நீட்டி இருக்கிறது
எடுப்பதற்கு அல்ல
கொடுப்பதற்கு
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே


எந்த மரமும் அடுத்த மரத்தின்
கிளை உடைப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே

எந்த மரமும் சும்மா இருப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !

தான் உயரே செல்ல செல்ல
தன் மண்ணின் மிது
பற்றை அதிகமாக்கி
கொள்வது மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !


கோவிலில் வளர்ந்தாலும்
சர்ச்சில் வளர்ந்தாலும்
மசூதியில் வளர்த்தாலும்
மரங்களுக்கு மதம் பிடிப்பதில்லை
மரம் மரமாகவே இருக்கிறது
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
உலகில் முதலில்
முழு உடல் தானம்
செய்தது மனிதன் இல்லை
மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !

Monday, February 23, 2009

மாற்றம்















முன்பு என் கையெழுத்து கிறுக்கல்
இப்போதோ ஓவியம்
முன்பு பேச தயங்கியவன்
இப்போதோ கவிதை சொல்கிறேன்
முன்பு நகைசுவைக்கு கோபபட்டவன்
இப்போதோ திட்டினாலும் சிரிக்கிறேன்
முன்பு பூக்களை கசகியவன்
இப்போதோ முட்களையும் முத்தமிடுகிறேன்

நான் என் மனதிடம் கேட்டேன்
ஏன் இந்த மாற்றம்
என் மனம் சொன்னது
நீ காதலித்துக்கொண்டு இருக்கிறாய்